'மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்'... 'டிஸ்பி ஷில்பா'வை யாருன்னு தெரியுதா'?... 'அவரா இவர், அசந்து போன மக்கள்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காவல் பணி என்பது மக்களுக்கானது என்பதைத் தனது கர்ப்ப காலத்திலும் நிரூபித்து உள்ளார் டிஎஸ்பி ஒருவர்.

'மண்டையை பிளக்கும் உச்சி வெயில்'... '5 மாத கர்ப்பம்'... 'டிஸ்பி ஷில்பா'வை யாருன்னு தெரியுதா'?... 'அவரா இவர், அசந்து போன மக்கள்'... வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனாவின் ஆட்டம் இன்னும் முடியவில்லை. அதற்குள் கொரோனாவின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பேரிடர் பெரிய சோகங்களையும், பல நம்பிக்கைகளையும், உண்மைகளையும், கடமையாளர்களையும் நமக்கு நிறையவே காட்டி வருகிறது. அந்த வகையில் தனது தனிப்பட்ட விருப்பங்களை விடக் கடமையே முக்கியம் என நிரூபித்து உள்ளார் டிஎஸ்பி  ஒருவர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பஸ்தார் பகுதியில் விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வரும் நிலையில், அவர்களைப் பெண் டிஎஸ்பி ஷில்பா சாஹு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்து வருகிறார். அவர் ஐந்து மாத கர்ப்பிணியும் கூட.

Pregnant DSP Shilpa Sahu urges people to follow Covid norms

அவர் நினைத்திருந்தால் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து இருக்கலாம். ஆனால் கடமையே முக்கியம் என்று கடுமையான வெயிலில் நின்றுகொண்டு பணிகளை கவனித்து வருகிறார் டிஸ்பி ஷில்பா சாஹு. கடுமையான கொரோனா சூழலிலும் வீட்டில் இருக்காமல் கடமையைச் செய்துவரும் ஷில்பா சாஹுவின் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவருக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

Pregnant DSP Shilpa Sahu urges people to follow Covid norms

ஷில்பா சாஹு பல அதிரடிகளுக்குப் பெயர் பெற்றவர். அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிரடி காட்டியவர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். இதனால் எப்போதும் காவல்துறை விழிப்புடனே செயல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் எல்லாம் பல நக்சல் நடவடிக்கைகளுக்காகக் காட்டிற்குள் சென்று பல அதிரடிகளைச் செய்தவர் தான் ஷில்பா சாஹு.

இதற்கிடையே சத்தீஸ்கர் டிஜிபி டி.எம்.அவஸ்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷில்பா இந்த நிலையில்கூட பணிபுரிகிறார்… அவர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்… அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டு. ஷில்பா சத்தீஸ்கர் போலீசாரின் சொத்து" என்று குறிப்பிட்டுள்ளார்.

Pregnant DSP Shilpa Sahu urges people to follow Covid norms

இதற்கிடையே நெட்டிசன்கள் சிலர், ஷில்பாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தாலும், இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அவருக்கு விடுமுறை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா, அதை விடுத்து, அவரை பணி செய்ய வைப்பது என்ன வகையான நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்