'அரசு நிகழ்ச்சிக்கு போன இடத்தில்'... 'கட கடவென 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய 'அமைச்சர்'... காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசு நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் அமைச்சர் ஒருவர் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

'அரசு நிகழ்ச்சிக்கு போன இடத்தில்'... 'கட கடவென 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய 'அமைச்சர்'... காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்திலுள்ள அம்கோ கிராமத்துக்கு அரசு நிகழ்ச்சிக்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கிராம மக்களைச் சந்தித்த அவர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தினமும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அந்த கிராம மக்கள் அமைச்சரிடம் கூறினார்கள்.

இதையடுத்து முக்கிய பிரச்சனைகளை உடனே தீர்ப்பதாக வாக்களித்த அமைச்சர், உடனே சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடம் தனது செல்போன் மூலம் பேச முயன்றார். ஆனால் அவரது மொபைலில் சுத்தமாக நெட்ஒர்க் கிடைக்கவில்லை. அப்போது அங்கிருந்த 50 அடி உயரமுள்ள ராட்டினத்தில் ஏறிய அமைச்சர், அதிலிருந்தவாறே சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடம் பேசினார். இதற்கிடையே அமைச்சர் திடீரென ராட்டினத்தில் ஏறியது அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

 4ஜி, 5ஜி என்று புதுப் புதுப் தொழில்நுட்பத்தில் நாடு சென்று கொண்டிருந்தாலும், இன்னும் பல கிராமங்களுக்கு ஆரம்பக்கட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள் சென்று சேரவில்லை என்பது தான் நிதர்சனமான மற்றும் கசப்பான உண்மை.

மற்ற செய்திகள்