New Year : புதுச்சேரி வரும் சன்னி லியோன்.. 18 வயசுக்கு மேலே இருந்தால்தான் அனுமதி.. கூடவே ஒரு கண்டிசன்
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் புத்தாண்டும் வரவுள்ளது.
2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், புத்தாண்டுக்காக மக்கள் காத்திருக்கும் அதே வேளையில், மறுபக்கம் உருமாறிய ஒமைக்ரான் தொற்றின் தீவிரமும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், பல மாநிலங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தி வருகிறது.
மேலும், சில மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, புத்தாண்டும் வருவதால், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடி, கொண்டாட்டங்களில் ஈடுபடவும் செய்வார்கள். இந்நிலையில், வைரஸ் பரவல் தொற்று காரணமாக, புத்தாண்டு கொண்டாத்திற்கு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
தனியார் நட்சத்திர விடுதிகளில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைக்கு செல்லவும், பொது மக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அனுமதி
ஆனால், அதே வேளையில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, பொது இடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதத்தில், வரும் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில், சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, ஓல்டு ஹார்பர் உள்ளிட்ட இடங்களில், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி
இந்த இசை நிகழ்ச்சியை கமர் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் ஒருங்கிணைந்து வழங்குகிறது. இதுபற்றி, தகவலை வெளியிட்ட அந்த நிறுவனம், புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசி நிச்சயம் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 18 வயதைக் கடந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள் மட்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்