"இந்த போலீஸ்'க்கு ஒரு பெரிய சல்யூட்டே போடலாம்.." வண்டியை இழுத்துட்டு போன முதியவர் மனச குளிர வெச்ச போலீஸ்.. வாழ்த்தித் தள்ளும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இணையத்தை நாம் தினந்தோறும் திறந்து, அதில் நிறைய நேரத்தை செலவிடும் போது, அதிர்ச்சி, வேடிக்கை, மனம் உருக வைப்பது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என ஏராளமான விஷயங்களும் நிறைந்து கிடக்கின்றன.

"இந்த போலீஸ்'க்கு ஒரு பெரிய சல்யூட்டே போடலாம்.." வண்டியை இழுத்துட்டு போன முதியவர் மனச குளிர வெச்ச போலீஸ்.. வாழ்த்தித் தள்ளும் நெட்டிசன்கள்

Also Read | "இந்த ஆபீஸ் எங்க பாஸ் இருக்கு??.." - ஊழியர்களுக்கு நிறுவனம் கொடுத்த வேற மாறி 'சர்ப்ரைஸ்'..

அந்த வகையில், தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோ ஒன்று, பார்ப்போர் பலரையும் மனம் நெகிழ வைத்தது மட்டுமில்லாமல், அந்த நபருக்காக சல்யூட் போடவும் வைத்துள்ளது.

சல்யூட் போட வைத்த போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், சாலை ஓரமாக வயதான நபர் ஒருவர், காலில் செருப்பு எதுவும் அணியாமல் வெறும் காலில், வண்டியை இழுத்த படி சென்று கொண்டிருந்தார். கடும் வெயிலில் கூட, கால் வலியை பொருட்படுத்தாமல், உழைப்பிற்காக இந்த வயதிலும் தீவிரமாக இயங்கும் அந்த  நபருக்கு, அப்பகுதி போலீசார் ஒருவர், புதிதாக செருப்பு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், செருப்பை வாங்கித் தந்த போலீசாருக்கு கையெடுத்து கும்பிட்ட படி, தனது நன்றிகளையும் அந்த வயதான நபர் தெரிவித்துள்ளார்.

நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்

இது தொடர்பான வீடியோவை உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரியான ஷிவாங் சேகர் கோஸ்வாமி என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மிகவும் அருமையான மற்றும் பாராட்டுக்குரிய பணி" என அந்த போலீசின் செயலை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

மேலும், இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சுமார் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது. அதே போல, இது தொடர்பான வீடியோவை பார்க்கும் மக்களும், நெஞ்சைத் தொடக் கூடிய வகையில் போலீசாரின் செயல்பாடு இருந்ததாகவும், ஆயிரம் முறை உங்களை வாழ்த்துகிறேன் என்றும் ஏராளமான கருத்துக்களை போலீசாரின் மனிதாபிமான செயலுக்காக தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | தென்னந்தோப்பில்.. எரிந்து கிடந்த இளம்பெண்.. இரவில் கணவன் குடும்பம் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்.. திடுக்கிடும் பின்னணி

 

UTTAR PRADESH, POLICE, SLIPPERS, CART PULLER, BAREFOOT

மற்ற செய்திகள்