My India Party

'மச்சானுக்கு கல்யாணம்.. லீவு கொடுத்தே ஆகணும்'... இதெல்லாம் கூட பரவால்ல... பின்குறிப்பில் இருந்ததுதான் வேற லெவல்.. வைரலான காவலரின் விடுப்பு விண்ணப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு காவலர்,  தனது மைத்துனர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மேல் அதிகாரிக்கு எழுதி கொடுத்த வித்தியாசமான விடுப்பு விண்ணப்பம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

'மச்சானுக்கு கல்யாணம்.. லீவு கொடுத்தே ஆகணும்'... இதெல்லாம் கூட பரவால்ல... பின்குறிப்பில் இருந்ததுதான் வேற லெவல்.. வைரலான காவலரின் விடுப்பு விண்ணப்பம்!

பொதுவாக காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்பினைக் கோரி மேல் அதிகாரியிடம் விண்ணப்ப மனுவினை அனுப்புவது வழக்கம். அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலிப் குமார் அகிர்வார் என்பவர், டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தனது மைத்துனருக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், ஆகவே அதை அட்டெண்ட் செய்ய, டிசம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை தனக்கு விடுப்பு வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன்,  அதோடு விட்டு விடாமல் பின்குறிப்பு என்று சொல்லி, “இந்த விடுப்பை நீங்கள் எனக்கு அளித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நான் என் மனைவியிடம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் எழுதியுள்ளார்.

இந்தியில் எழுதப்பட்டிருக்கும் இந்த கடிதம் தான் தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் உபேந்திர ஜெயின் பேசியபோது, “இப்படியான காரணம் கூறி விடுப்பு கேட்டுள்ள காவலருக்கு நிச்சயம் விடுப்பு கிடைக்காது. ஒரு போலீஸ் இப்படி விண்ணப்பம் அளிப்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

 

மாறாக அவர் தண்டிக்கப்படுவர். இவர் தன் மனைவி மீது உள்ள பயத்தினால் இப்படி பின்குறிப்புடன் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கடந்த 11 மாதங்களில் மட்டும் திலீப் குமார் 55 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவருகிறது” என கூறினார்.

 

மற்ற செய்திகள்