'இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!!'.. 'மாட்டு வண்டி மீது'.. 'பாய்ந்த மோட்டார் வாகனச் சட்டம்?!'
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதலே அமலுக்கு வந்தன.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள சார்பா கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் ஹாசன் என்பவர் ஓட்டி வந்த மாட்டுவண்டிக்கு காவல் துறையினர் அபராத விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று தனது வயலோரமாக உள்ள சாலை ஓரத்தில், தன் மாட்டுவண்டியை நிறுத்தி வைத்திருந்த ரியாஸ் ஹாசனிடம், அங்கு ரோந்துக்கு வந்த சாஹஸ்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பங்கஜ் குமார், ரியாஸ் ஹாசனின் வீட்டுக்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று விடச் சொல்லி, 1000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். அதற்கான ரசீதையும் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் குழம்பிப் போன ரியாஸ் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரித்தபோதுதான், ரசீதை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதுபற்றி பேசிய காவலர்கள், சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக செய்தி வந்ததை அடுத்து சோதனை செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அபராதம் விதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் இரவு வேளை என்பதால் வாகன விதிமுறைக்கான பில் புக் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.