'பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு'?...'அவர் பெயரில் கடன் இருக்கா'?... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களைப் பிரதமர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

'பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு'?...'அவர் பெயரில் கடன் இருக்கா'?... வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

பிரதமர் மோடியின் சமீபத்திய சொத்து அறிக்கையின் படி அவரது நிகர சொத்து மதிப்பு 2020 ஜூன் 30 நிலவரப்படி ரூ 2.85 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.2.49 கோடியாக இருந்தது. சுமார் 3.3 லட்சம் வங்கி வைப்பு மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாகப் பிரதமர் மோடியின் சொத்து ஓரளவு அதிகரித்துள்ளன. பிரதமர் மோடியின் கையில் ரூ.31,450 ரொக்கமாகவும், வங்கி இருப்பு ரூ.3,38,173 ஆகவும், எஸ்பிஐ காந்திநகர் என்எஸ்சி கிளையில் வங்கி நிரந்தர வைப்பு மற்றும் எம்ஓடி இருப்பு ரூ,60,28,939 ரூபாயும் இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

PM Modi's net worth has slightly increased this year

பிரதமருக்கு ரூ.8,43,124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி), ரூ.1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ரா பத்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடி அறிவித்த அசையும் சொத்துக்கள் சுமார் ரூ1.75 கோடி ரூபாய் ஆகும். பிரதமர் மோடி எந்த ஒரு கடனும் வாங்கவில்லை என்றும் அவரது பெயரில் வாகனம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியிடம் சுமார் 45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்கள் உள்ளது. அவற்றின் மதிப்பு 1.5 லட்சம் ஆகும்.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு 13.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 அசையா சொத்துகள் உள்ளது. பிரதமர் அலுவலக அறிவிப்புகளின்படி. அவர் கையில் ரொக்கமாக ரூ.15,814, வங்கி இருப்பு மற்றும் காப்பீட்டில் ரூ.1.04 கோடி, ரூ .1347 லட்சம் மதிப்புள்ள ஓய்வூதிய பாலிசிகள், நிலையான வைப்புத் திட்டங்களில் ரூ.2.79 லட்சம் மற்றும் ரூ.44.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில் அமித்ஷாவின் நிகர சொத்து மதிப்பு குறைந்தது, ஏனெனில் அவர் வைத்திருந்த மேற்கோள் பத்திரங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

மற்ற செய்திகள்