மோடி பிரதமராக பதவியேற்றிருக்கும் நிலையில் 'மோடியின் சகோதரர் என்ற வாசகத்துடன் ஆட்டோ ஓட்டுனரின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
தற்போது வைரலாக பரவி வரும் இந்த புகைப்படம் ஒன்றும் புதிது அல்ல.மோடி.கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இதே ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ''ஒரு நாட்டின் பிரதமரின் சகோதரர் சாதாரண ஆட்டோ ஓட்டுநர்’’ நமது பிரதமர் எவ்வளவு எளிமையானவர் என்ற வாசகங்களுடன் பாஜக தொண்டர்கள் அந்த புகைப்படத்தை வைரலாகினார்கள்.
இந்த முறையும் மோடி பிரதமாக பதவியேற்ற பின்பு அந்த புகைப்படம் மீண்டும் வைரலாகியது.இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் யார்? அவர் உண்மையிலேயே மோடியின் சகோதரரா என்பதை அறிய டெக்கான் அப்ராட் என்ற ஊடகம் களத்தில் இறங்கியது. தற்போது அதன் உண்மை தன்மையையும் வெளியிட்டுள்ளது.
அதில் மோடியை போன்ற தோற்றத்தில் இருக்கும் நபரோ பேருந்து ஓட்டுநராக இருந்து ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஷேக் அயூப் ஆகும்.இவர் தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலான இவரது புகைப்படம்,சில ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தற்போது வைரலாகியுள்ளது.