ராணுவ தளபதிகளுடன் அவசர அவசரமாய் லடாக் எல்லையில் இறங்கிய பிரதமர் மோடி!.. என்ன நடக்கிறது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிழக்கில் லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் தொடர்ந்து இந்திய எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது.

ராணுவ தளபதிகளுடன் அவசர அவசரமாய் லடாக் எல்லையில் இறங்கிய பிரதமர் மோடி!.. என்ன நடக்கிறது?

இன்னொரு புறம் சீன ராணுவத்துடன் இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியும், சீன ராணுவம் தனது படைகளை எல்லைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தது. எனினும் ஆயுதம் ஏந்திய படைக்கு எல்லையில் தடை செய்யப்பட வேண்டும் என்கிற ஒப்பந்தம் நிலவிவருகிறது.

இந்நிலையில் லடாக்கில் ராணுவ வீரர்களுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதன் நிமித்தமாக லடாக்கில் பிரதமர் மோடி, முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே உள்ளிட்டோருடன் சென்று எல்லைப்படையினரை சந்திக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

மற்ற செய்திகள்