பிரதமர் மோடி & வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அனுப்பிய Gift..! வைரல் Pics..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக திகழ்வது கால்பந்து. இதில் சாதாரண கிளப் போட்டிகளே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெறுவது உண்டு. அந்த அளவிற்கு பல நாடுகளிலும் கால்பந்து பிரபலமானது. இந்த சூழ்நிலையில் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. அர்ஜென்டினா அணியை மெஸ்ஸி வழிநடத்தினார். ஆரம்பத்தில் சவூதி அரேபியாவிடம் வெற்றியை பறிகொடுத்த அர்ஜென்டினா, அடுத்தடுத்த ஆட்டங்களில் அபாரமாக ஆடியது.
Images are subject to © copyright to their respective owners.
இறுதிப் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்டு உலகக்கோப்பையையும் தன்வசமாக்கியது அர்ஜென்டினா. இந்த தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக மெஸ்ஸி அறிவித்திருந்த நிலையில் பின்னர் சாம்பியனாக சிறிதுகாலம் விளையாட இருப்பதாக அறிவித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பின்னர் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மெஸ்ஸி தன்னுடைய ஜெர்சியை அனுப்பியும் இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கும் மெஸ்ஸியின் ஜெர்சி பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டேனியல் பிலிமஸை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மெஸ்ஸியின் ஜெர்சியை டேனியல் வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் புன்னகையுடன் அதனை பெற்றுக்கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அதேபோல, இந்தியா எனெர்ஜி வீக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு YPF-ன் தலைவர் பாப்லோ கோன்சலஸ் மெஸ்ஸியின் ஜெர்சியை பரிசாக அளித்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!
மற்ற செய்திகள்