‘வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்த ஆலோசனை’.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் சொன்னது என்ன..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கை கடைபிடிப்பதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

‘வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்த ஆலோசனை’.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் சொன்னது என்ன..?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்களை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி உதவியை உறுதி செய்வதுடன் சமூக இடைவெளியை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்துள்ளார்.