‘3 பேர் அடையாளம் தெரிஞ்சிருக்கு’!.. நாட்டை உலுக்கிய ‘கர்ப்பிணி யானை’ விவகாரம்.. கேரள முதல்வர் புது தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்ப்பிணி யானை வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம் நாட்டையே அதிரவைத்தது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும், இந்த கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டனை தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது. இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டது. யானையின் வாய் பகுதி வெடிபொருட்கள் வெடித்து சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சலால் அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் உண்ணாமல் இருந்துள்ளது. அதனால் முற்றுலுமாக சீர்குலைந்த யானை நீரில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பாலக்காட்டில் மிக மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக மக்கள் அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அவர்களது வேதனை வீண் போகாது. மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்த்தில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
An investigation is underway, focusing on three suspects. The police and forest departments will jointly investigate the incident. The district police chief and the district forest officer visited the site today. We will do everything possible to bring the culprits to justice.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) June 4, 2020
மற்ற செய்திகள்