மகிழ்ச்சி தான்...! ஆனா இது 'அதுக்கான' நேரம் கிடையாது...! இப்போ நாம பண்ண வேண்டியது 'ஒரே' விஷயம் தான்...! - பினராயி விஜயன் பேட்டி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதேர்தலில் வெற்றி பெற்றாலும் இது நாம் கொண்டாட வேண்டிய நேரம் இல்லை, போராடவேண்டிய நேரம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து, கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது.
மொத்தம் 140 தொகுதிகள் கொண்டிருக்கிற கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
140 தொகுதியில் இடதுசாரியினர் 99 இடங்களில் முன்னிலையில் இருந்து இதுவரை 81 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் 41 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் நிலையில், 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி செயல்பட்ட கேரளாவின் சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா அதாவது ஷைலஜா டீச்சர் அதிகபட்சமாக 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னணியில் இருந்து 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் தர்மதம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் வாக்குபதிவு குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் பேசியுள்ளார்.
அதில், 'கேரளா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய நேரம். தொடர்ந்து போராடுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்