யாரெல்லாம்பா 'நீரஜ்'னு பெயர் வச்சிருக்கீங்க...? 'உங்களுக்கு ஒரு செம குட் நியூஸ்...' - ச்சே... நமக்கு இந்த 'பெயர்' இல்லையே என 'வருத்தப்படும்' வாலிபர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா வென்று இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
இந்தியாவே இவரின் வெற்றியை கொண்டாடும் நிலையில், குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய சூழலில் பெட்ரோல் விலை தங்கம் விலைப்போல் அதிகரித்து வரும் நிலையில் பரூச் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் தங்கள் முகப்பில் 'நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என்ற பெயர் கொண்டவர்களுக்கு 501 ரூபாய்க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும்' என எழுதி வைத்துள்ளனர்.
இதற்கு ஒரு நிபந்தனையும் உள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என இருந்தால், அவர் அசல் ஆவணத்தை காட்டிவிட்டு இலவசமாக பெட்ரோலை வாங்கி செல்லலாம். இந்த சலுகை இன்று (திங்கட்கிழமை) வரை மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பெட்ரோல் வாங்குபவர்களுக்கு பெட்ரோலுடன் பூங்கொத்து கொடுத்து பங்க் ஊழியர்கள் கவுரவித்தனர்.
மற்ற செய்திகள்