Video: 'மலைச்சரிவில் உருண்டு விழுந்த லாரி!'.. கோரசாக கத்தியபடி ‘தெறிக்க விட்ட’ ஊர்மக்கள்.. ‘மெய் சிலிர்க்க’ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊர் ஒன்றுபட்டால் நடக்காத காரியம் ஏதும் இல்லை என்பதை நாகலாந்தில் இருக்கும் ஊர் மக்கள் நிரூபித்துள்ளனர்.
நாகலாந்தில் மலைச்சரிவில் இருந்து லாரி ஒன்று உருண்டு ஓடி கவிழ்ந்தது. பொதுவாகவே இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர மிதவை வாகனங்கள் இப்படி மலைச்சரிவில் இருந்து உருண்டு விழுவது உண்டு. அவ்வாறு நடந்தால் அவற்றை மீட்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் இத்தனை பெரிய லாரியை மலைச்சரிவில் இருந்து உருண்டு ஓடிய பின்னர் எப்படி மீட்பது?
நிச்சயம் இதற்கு அதிகாரிகள், தீயணைப்புத்துறை போன்று மீட்புப்படையினர் தான் தேவை. ஆனால் அவர்கள் எந்திரங்களின் உதவியோடுதான் இதை மீட்க முடியும். இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாகலாந்தில் உள்ள கிராம மக்கள் களத்தில் இறங்கினர். இதற்கென அவர்கள் செய்துள்ள காரியம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
நாகலாந்தை சேர்ந்த கிராம மக்கள், மலைச்சரிவில் இருந்து சரிந்து விழுந்த லாரியை கண்டுள்ளனர். பின்னர் தாமதிக்காமல், தாங்களே மீட்டு எடுக்கலாம் என்று கூட்டாக யோசித்து களத்தில் இறங்கியுள்ளனர். இதற்கென அனைவரும் லாரியை கயிறுகளால் கட்டினர். ஒரு உற்சாகத்துக்கு கோரசாக சத்தம் எழுப்பிக் கொண்டனர். அந்த உற்சாகம் கொஞ்சம் கூட குன்றாமல் சரிவான பகுதியில் இருந்து நேரான பாதைக்கு லாரியை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
ஊர் கூடி தேர் இழுத்தால் யாவும் சாத்தியம்தான் என்று சொல்வார்கள். இதுவரை வெறும் பழமொழியாக மட்டுமே இருந்தது இந்த வாக்கியம். உண்மையில் இதற்கு அர்த்தம் கற்பித்தவர்கள் தான் இந்த ஊர் மக்கள். இந்த வீடியோவை இணையத்தில் பலரும் இந்த மக்களை பாராட்டியும் பகிர்ந்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்