சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்தின் போது, சாப்பாட்டு பகுதி திறக்கப்பட்டவுடன் உறவினர்கள் அனைவரும் பாய்ந்து ஓடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!

Also Read | உயிருக்கே ஆபத்துன்னு நடுராத்திரில 100க்கு கால் செஞ்ச இளைஞர்.. பதறிப்போய் ஓடிவந்த போலீஸ்.. கடைசில காரணத்தை கேட்டு செம்ம கடுப்பான அதிகாரிகள்..!

திருமணம்

காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான பதார்த்தங்களுடன் கூடிய விருந்துகள் நடைபெறுவது நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் திருமணத்தன்று ஆடிப்பாடி, விதவிதமான உணவுகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணமாக கருதப்படும் திருமணத்தில் என்னென்ன வகையான உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்ற பட்டியல் கல்யாணத்திற்கு பல மாதங்கள் முன்பே திட்டமிடப்பட்டுவிடும்.

People entering the dining hall in marriage hurriedly

அப்படி பார்த்து பார்த்து தயாரிக்கப்படும் திருமண விருந்துகளில் கலந்துகொள்ள எப்போதும் மக்களிடத்தில் தணியாத வேட்கை இருந்துவருகிறது. அந்த வேட்கை தான் இப்பொது வீடியோவாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விருந்து

இந்த வீடியோவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உறவினர்கள், சாப்பாட்டு பகுதிக்குள் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்பகுதி திறக்கப்பட்டவுடன் அதிவேகமாக உள்ளே நுழையும் மக்கள், அங்கே வைக்கப்பட்டிருக்கும் தட்டுகளில் உணவு பதார்த்தங்களை நிரப்புகிறார்கள். திருமண வைபவத்திற்கு வந்த மக்கள் அதிவேகமாக விருந்து நடைபெறும் பகுதிக்குள் பாய்ந்து வரும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கிறது.

 

People entering the dining hall in marriage hurriedly

கமெண்ட்ஸ்

சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் கமெண்ட்களை பறக்கவிட்டு வருகின்றனர். இந்த பதிவில் ஒருவர்,"திருமணங்களில் எனது நண்பர்கள் இப்படித்தான் செய்வார்கள்" என்றும் "Wedding goals" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர் சமூக வலைதளவாசிகள்.

திருமண விருந்தில் கலந்துகொள்ள உறவினர்கள் விரைந்து ஓடும் இந்த வீடியோவை இதுவரையில் 33 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை 1.8 மில்லியன் மக்கள் லைக் செய்துள்ளனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

MARRIAGE, PEOPLE, DINNING HALL, திருமணம், சாப்பாட்டு பந்தி

மற்ற செய்திகள்