ரயில்வே ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்ட பயணிகள்.. ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ.. ஓ இதுக்குத்தானா?
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பயணிகள் சந்தோஷமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
குஷியான பயணிகள்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராட்லாம் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு வந்த பாந்த்ரா - ஹரித்வார் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் திடீரென பிளாட்பார்மில் நடனமாடினார்கள். குஜராத்தைச் சேர்ந்த இந்த பயணிகள், அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனமான கார்வா-வை ஒன்றுசேர்ந்து ஆட, ரயில்வே ஸ்டேஷனில் இருந்த சக பயணிகள் அனைவரும் வியப்படைந்தனர். இதனை வீடியோவாக எடுத்து மக்கள் சமூக வலை தளங்களில் பகிர, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
என்ன காரணம்?
பொதுவாகவே இந்தியாவில் ரயில்கள் தாமதமாக வருவது குறித்து அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் உள்ள ராட்லாம் ரயில்வே ஸ்டேஷனிற்கு பாந்த்ரா - ஹரித்வார் ரயில் 20 நிமிடத்திற்கு முன்பாகவே வந்தடைந்திருக்கிறது. இதுதான் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ரயிலில் பயணித்த குஜராத்தைச் சேர்ந்த பயணிகள் நடனமாடத் துவங்கியிருக்கிறார்கள்.
ராட்லாம் ரயில்வே ஸ்டேஷனிற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே அதாவது இரவு 10.15 மணிக்கே பாந்த்ரா - ஹரித்வார் ரயில் வந்து சேர்ந்தது. இதனால் மீண்டும் ரயில் புறப்பட 30 நிமிடங்கள் நேரம் இருப்பதை அறிந்த பயணிகள் சந்தோஷத்தில் ரயிலில் இருந்து கீழே இறங்கி 4 வது பிளாட்பார்மில் நடனமாடியிருக்கிறார்கள்.
வைரல் வீடியோ
மத்திய பிரதேச மாநில ரயில்வே நிலையத்தில் பயணிகள் நடமாடும் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ். மேலும், பயணம் மகிழ்ச்சியாக அமையட்டும் எனப் பொருள்படும் வகையில் Happy Journey என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
मजामा!
Happy Journey 🚉 pic.twitter.com/ehsBQs65HW
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) May 26, 2022
மற்ற செய்திகள்