விமானத்தில்.. அடுத்தடுத்து மயங்கிய பயணிகள்.. நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமானம் ஒன்றில், திடீரென அதில் இருந்த பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

விமானத்தில்.. அடுத்தடுத்து மயங்கிய பயணிகள்.. நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன??

Also Read | அய்யய்யோ.. வெளிச்சத்துல தூங்குனா இந்த பிரச்சினை எல்லாம் வரலாமா? அதிர வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!

கடந்த சில தினங்களுக்கு முன், டேராடூனில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று  கிளம்பிச் சென்றுள்ளது.

விமனானத்தில் மயங்கிய பயணிகள்

அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது, உள்ளே என்ன நடந்தது என்பது பற்றி வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, பரபரப்பையும் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அப்படி அந்த விமானத்திற்கு என்ன நடந்தது பயணிகளுக்கு என்ன ஆனது என்பது பற்றி கீழே பார்க்கலாம்.

வேலை செய்யாத 'AC'

அந்த வீடியோவில் பேசும் பெண் பயணி, "சுமார் ஐந்தரை மணிக்கு விமானம் மும்பைக்கு கிளம்பியது . தற்போது ஆறு மணிக்கு மேல் ஆகியும், விமானத்தில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை. விமானத்தில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை என்றால் விமானம் புறப்பட்டு இருக்கவே கூடாது. இந்த விமானத்தில் சற்று சங்கடமான நிலையும் உருவாகி உள்ளது.

 passengers fainted after ac stop working in flight

"மயங்கியும் விழுந்துட்டாங்க.."

மேலும் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் விமானத்திற்குள் மூச்சுத்திணறல் பலருக்கும் ஏற்பட்டது. பல பயணிகளுக்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு உள்ளானார்கள். மேலும், தங்களிடம் இருந்த பேப்பர்களை பயன்படுத்தி வீசி ஓரளவுக்காவது நிம்மதி அடைந்தார்கள். அது மட்டுமில்லாமல் உள்ளே இருந்த மூன்று பேர் மயங்கி விழுந்தனர். இதில் ஒருவர் கேன்சர் நோயாளியும் கூட.

வைரலாகும் வீடியோ

ஒரு முறை பயணம் செய்ய நாங்கள் 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளோம். அப்படி இருந்தும் இப்படி எல்லாம் நடப்பது தவறாக இருக்கிறது. தயவுசெய்து எதையாவது செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டு, தனியார் விமான நிறுவனத்திற்கு கோரிக்கை ஒன்றையும் அந்த பெண் வைத்துள்ளார்.

 passengers fainted after ac stop working in flight

பெண்ணின் இந்த கோரிக்கைக்கு விமான நிறுவனம் தரப்பிலிருந்து உதவி செய்யப்படும் எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்தினால் விமானத்தில் ஏசி இயங்கவில்லை என்பது பற்றி விவரங்கள் சரியாக சரிவர தெரியவில்லை. இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | புருஷன் வர 15 நாள் ஆகும்.. காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற மனைவி.. விஷயம் கேள்விப்பட்டு நேரா ரூமுக்குள்ள நுழைஞ்ச கணவன் செஞ்ச காரியம்..!

PASSENGERS, FLIGHT, AC, பயணிகள்

மற்ற செய்திகள்