"மீடியால வர்றதெல்லாம் பாக்குறீங்கல்ல?" .. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வித்யாசமின்றி 'சுஷாந்துக்காக' இப்படி 'களமிறங்கிய' கட்சிகள்'! அதிர்ந்த ட்விட்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, சுஷாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, நடிகர், நடிகையர் என வித்தியாசம் இல்லாமல் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முன்னதாக பாஜக தலைவரும், நடிகருமான மனோஜ் திவாரி முன்னதாக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆளுநருமான நிகில் குமார், ஆகியோரும் சுஷாந்த் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் தரப்பிலிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவு, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோருக்கு சுஷாந்த் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று செவ்வாய்க்கிழமை அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிஹார் இளைஞர் காங்கிரஸ் அணித் தலைவரும், திரைப்படத் தணிக்கை ஆலோசனைக் குழு உறுப்பினருமான லாலன் குமார் என்பவர், இந்த கடிதத்தை எழுதியுள்ளார்
இந்த கடிதத்தில் லாலன் குமார், ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, சுஷாந்த் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாகவும் சிபிஐ விசாரணை மட்டுமே அவரது மரணம் பற்றிய ஒட்டு மொத்தக் குழப்பங்களையும் களைக்கும் என்றும் தெரிவித்துள்ளதோடு, மேலும் 15 நாட்களில் தனது கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால், நீதிமன்றம் போவதாகவும் சுஷாந்துக்கு நியாயம் கிடைக்கும் வரை பிஹாரில் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களின் படங்கள் திரையிடப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்