பாச மகனுடைய கல்லறையில் QR Code பதித்த பெற்றோர்.. கலங்கடிக்கும் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களது மகனுடைய கல்லறையில் கியூ ஆர் கோடை பதித்திருக்கிறார்கள் ஒரு பெற்றோர். இதற்கான காரணம் தான் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

பாச மகனுடைய கல்லறையில் QR Code பதித்த பெற்றோர்.. கலங்கடிக்கும் காரணம்..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ...!

மகனின் நினைவு

பொதுவாக குடும்பங்களில் ஏற்படும் மரணம் அந்த குடும்பத்தில் இருப்பவர்களை உலுக்கிவிடும். அதுவும் இளவயதில் ஏற்படும் மரணங்கள் தரும் வலி வாழ்நாள் முழுவதும் சிலருக்கு குறிப்பாக இறந்தவர்களின் பெற்றோரின் அடிமனதில் தங்கிவிடும். அவர்களுடனான நினைவுகளை அசைபோட்டபடி மீதியுள்ள வாழ்க்கையை இறந்துபோனவர்களின் பெற்றோர்கள் கவலையுடன் அசைபோடுவார்கள். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த தம்பதி தங்களுடைய மகனுடைய கல்லறையில் கியூ ஆர் கோடை பதித்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தின் குரியாச்சிராவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. இந்த தம்பதி ஓமானில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ஐவின் பிரான்சிஸ். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மருத்துவ சேவை செய்து வந்த ஐவின் படிப்பு மட்டும் அல்லாது விளையாட்டு மற்றும் இசை ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். பல இசை கச்சேரிகளிலும் ஐவின் கலந்துகொண்டு பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சோகம்

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்து ஐவின் மரணமடைந்திருக்கிறார். அவருடைய உடல் செயின்ட் ஜோசப் சர்ச் கல்லறையில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஐவினின் சகோதரி புதிய யோசனை ஒன்றை தனது பெற்றோர்களிடத்தில் தெரிவித்திருக்கிறார். அதாவது ஐவினின் கல்லறையில் கியூ ஆர் கோடை பதிப்பது தான் அந்த யோசனை.

Images are subject to © copyright to their respective owners.

QR CODE

பெற்றோர்களின் சம்மதப்படி, ஐவின் கல்லறையில் கியூ ஆர் கோட் பதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஐவினை பற்றிய தகவல்கள் மற்றும் அவருடைய இசை ஆர்வம், அவர் பங்கேற்ற கச்சரிகளின் வீடியோக்களை காண முடியும். இறந்துபோன மகனின் நினைவாக கல்லறையில் பெற்றோர்கள் கியூ ஆர் கோட் பதித்தது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | மாஸ் என்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. CSK அணி பகிர்ந்த தரமான வீடியோ..!

KERALA, PARENTS, QR CODE, GRAVE, SON

மற்ற செய்திகள்