‘பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள், உங்களோட சேர்ந்து.... வைரலாகும் பாக்கிஸ்தான் பிரதமரின் ட்விட்’!
முகப்பு > செய்திகள் > இந்தியா17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வந்தது
மேலும், நாடு முழுவதும் மோடி அலை ஓயவில்லை என்று பாஜக தொண்டர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து, தற்போதைய நிலவரப்படி பாஜக 300 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்நிலையில், பல நாட்டை சேர்ந்த தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில், ‘பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நிலையில், தொடர்ந்து ஆசியாவின் வளர்ச்சிக்காகவும், அமைத்திக்காகவும் நாம் சேர்ந்து பணியாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
انتخابات میں بھارتیہ جنتا پارٹی اور اتحادیوں کی کامیابی پر میں وزیراعظم نریندرا مودی کو مبارکباد پیش کرتا ہوں اور جنوبی ایشیاء میں امن اور خطے کی ترقی و خوشحالی کیلئے ان کے ساتھ کام کرنے کیلئے پرامید ہوں۔
— Imran Khan (@ImranKhanPTI) May 23, 2019