'ஒத்த சொல்லால'...'நமீரா சலீம்' சொன்ன அந்த ஒரு வார்த்தை'...இது போதும்'...உருகிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிலவின் தென்‌துருவப்‌ பகுதியை ஆராய ’இஸ்ரோ’, சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இந்தியாவின் இந்த முயற்சியை உலகின் பல நாடுகளும் வெகுவாக பாராட்டின. விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது‌, எதிர்பாராத விதமாகக் கட்டு‌ப்‌பாட்டு அறைக்கு, லேண்டரிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

'ஒத்த சொல்லால'...'நமீரா சலீம்' சொன்ன அந்த ஒரு வார்த்தை'...இது போதும்'...உருகிய நெட்டிசன்கள்!

இந்நிலையில் யாரும் முயற்சி செய்யாத நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் எடுத்த முயற்சிக்கு, நாசா உட்பட பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் பாராட்டுத் தெரிவவித்தனர். ஆனால், பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி, கிண்டல் செய்து ட்வீட்டரில் விமர்சித்திருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களை பதிவிட்டு வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது ''சந்திரயான் 2’ நிலவு ஆராய்ச்சியில் தெற்காசியாவில் மட்டுமல்லாமல், விண்வெளி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். இது இஸ்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி. இதனை நிச்சயமாக பாராட்ட வேண்டும். பூமியின் அரசியல் எல்லைகள் நம்மை பிரித்தாலும், விண்வெளி நம்மை இணைக்கிறது'' என குறிப்பிடுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

ISRO, CHANDRAYAAN 2, NAMIRA SALIM, FIRST FEMALE ASTRONAUT