வந்துட்டே இருக்கேன் நண்பா...! 'இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாது...' 'மொத்தம் 1,400 கி.மீ டிஸ்டன்ஸ்...' - நெகிழ வைத்த நண்பன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் ஆக்சிஜன் தேவைப்படும் தன் நண்பனுக்கு செய்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தேவேந்திரா என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகோராவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் டெல்லியில் இருக்கும் ரஞ்ஜன் அகர்வால் எனும் நண்பர்கள்.
இந்நிலையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரஞ்சனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் ரஞ்சனுக்கு நுரையீரல் வரைக்கும் சென்றுள்ளதால், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை மூலம் ஆக்சிஜன் மூலம் சுவாசம் கொடுக்கப்பட்டாலும், அதன் பின்பு மேற்கொண்டு ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
இதனை கேள்விப்பட்ட தேவேந்திரா, தனது நண்பருக்காக பகோரா நகரில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், எவ்வளவு முயற்சித்தும் கிடைக்காத பட்சத்தில் 10 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு நிறுவனம் கடைசியாக கொடுக்க முன் வந்துள்ளது.
அதன்பின் தேவேந்திரா தனது காரில் ஆக்சிஜன் சிலிண்டரை பெற்றுக்கொண்டு டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணிக்கு ஜான்பூரிலிருந்து புறப்பட்ட தேவேந்திரா பீகார், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றை கடந்து நொய்டாவிற்கு திங்கட்கிழமை மாலை வந்தடைந்துள்ளார். பல இடங்களில் போலீசாரால் வழி மறுக்கப்பட்டாலும் தனது நண்பனின் நிலையை எடுத்துக்கூறி ஆக்சிஜனை ஒருவழியாக ரஞ்சன் அகர்வால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
தன் நண்பனுக்காக சுமார் 1,400 கி.மீ பயணித்து தன் நண்பன் ரஞ்சனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பும் வரை தனது நண்பருடன் கூடவே இருக்கப் போவதாகவும் தேவேந்திரா தெரிவித்துள்ளார்
மற்ற செய்திகள்