'2000' பேரை மொத்தமாக ... வீட்டுக்கு 'அனுப்பும்' பிரபல நிறுவனம்?... கலங்கும் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையால் சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதுநாள்வரை ஐடி, தனியார் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறைகளை அதிகம் பாதித்த இந்த பொருளாதார மந்தநிலை தற்போது சேவை நிறுவனங்களையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது.

'2000' பேரை மொத்தமாக ... வீட்டுக்கு 'அனுப்பும்' பிரபல நிறுவனம்?... கலங்கும் ஊழியர்கள்!

அந்தவகையில் இந்தியளவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ நிறுவனம் சிக்கன நடவடிக்கையின் பொருட்டு, ஜனவரி மாதம் சுமார் 2000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நடப்பு நிதியாண்டில் ஓயோவின் நஷ்டம் 2384 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 6 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் நஷ்டத்தினை ஈடுகட்டும் பொருட்டு அந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.