Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ஸ்போர்டின் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து இரண்டாவது கட்ட மனித சோதனை இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது.

Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் இருந்து மீள ஒரே தீர்வு தடுப்பூசிகளை கண்டுப்பிடிப்பது தான். அதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாராகியுள்ள கோவேக்சின் தடுப்பூசி முதற்கட்ட மனித சோதனை முடிந்து, அடுத்த மாதம் இரண்டாம் கட்ட சோதனை தொடங்கப்பட உள்ளது.

இதற்கிடையே, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா மருந்தை தயாரிக்கும் அனுமதி இந்தியாவின் புனே சீரம் இன்ஸ்ட்டியூட்டுக்கு வழங்கப்பட்டது.

இந்த மருந்து, இந்தியாவில் சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியதை அடுத்து முதற்கட்ட சோதனை முடிக்கப்பட்டு, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2ஆவது கட்ட மனித சோதனை தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. விலை குறைவாகவும், அனைத்து வயது தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் ஜெனிரிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டமிட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3ம் கட்ட சோதனையில், ஆயிரம் பேர் வரை சோதனை மேற்கொள்ளப்பட உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை ராஜிவ்காத்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்