தள்ளுவண்டியில் காய்கறி விற்றவரின் அக்கவுண்டில் கிரெடிட் ஆன 172 கோடி ரூபாய்.. அவருக்கு தலையே சுத்திடுச்சு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி விற்பனை செய்துவரும் நபர் ஒருவருடைய வங்கி கணக்கில் 172 கோடி ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது. இதுகுறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தள்ளுவண்டியில் காய்கறி விற்றவரின் அக்கவுண்டில் கிரெடிட் ஆன 172 கோடி ரூபாய்.. அவருக்கு தலையே சுத்திடுச்சு..!

                            Images are subject to © copyright to their respective owners.

காய்கறி வியாபாரம்

உத்திர பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள மைகர் ராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் ரஸ்தோகி. குடும்பத்தினருடன் வசித்துவரும் விஜய் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக பெரும் தொகை குறிப்பிட்ட நபருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரிகளிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய வருமான வரித்துறையினர் ஆன்லைன் மூலம் 172.8 கோடி ரூபாய் பணம் டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து யாருடைய வங்கி கணக்கிற்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, நேரடியாக விஜய் ரஸ்தோகியை சந்தித்து இதுகுறித்து கேட்டிருக்கின்றனர்.

முதலில் தனது வங்கி கணக்கில் இவ்வளவு பணம் வர வாய்ப்பே இல்லை என தெரிவித்த ரஸ்தோகி தன்னுடைய ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

என் அக்கவுண்ட் இல்லை

இதுகுறித்து பேசியுள்ள விஜய் ரஸ்தோகி,"என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவு தொகை இருப்பதை அறிந்து நானும் எனது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். என்னுடைய பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை திருடி யாரோ எனது பெயரில் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளனர். நான் இந்த கணக்கை வைத்திருக்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவரிடத்தில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காவல் ஆய்வாளர் பவன் குமார் உபாத்தியாய்," 172.8 கோடி ரூபாய் பணம் ஆன்லைன் மூலமாக விஜய் ரஸ்தோகி என்பவரது அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இதுகுறித்த விசாரணையில் இறங்கினோம். ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை ஆகியிருப்பதால் சைபர் கிரைம் காவல்துறையினர் இதுபற்றிய விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

காய்கறி விற்பனை செய்து வருபவரின் வங்கி கணக்கில் 172 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

UTTAR PRADESH, VEGETABLE VENDOR, IT

மற்ற செய்திகள்