புதுமையான முறைகளால் அசரடிக்கும் கேரளா..! சர்வதேச விருது பெற்று சாதனை..
முகப்பு > செய்திகள் > இந்தியாசீன நகராட்சியான சிகாங், இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சர்வதேச சங்கத்துடன் சேர்ந்து ஆண்டுதோறும் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவப்படுத்துகிறது.
இந்த ஆண்டு கேரளா இயற்கை விவசாயிகள் சங்கம் அந்த கௌரவப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. 25 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இந்தியாவிற்கே கிடைத்த பெருமை. மே 30-ஆம் தேதி கொரியாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அதனுடன் 5,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 3.5 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட இருக்கிறது.
கிட்டத்தட்ட 15,000 சிறு, குறு விவசாயிகளைக் கொண்டது இந்த சங்கம். இயற்கை விவசாயம் தவிர மரபு விதைகளைப் பாதுகாத்துப் பெருக்கவும் இவர்கள் முயன்று வருகின்றனர். விவசாயிகளை நாட்டுரக நெற்பயிர்கள், வெண்டை, கத்திரிக்காய், பீன்ஸ் ஆகியவற்றில் மரபு விதைகளைப் பயிர் செய்ய ஊக்கப்படுத்துகின்றனர்.
புதிதாக இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கென 20 நாட்கள் பயிற்சி வகுப்பும் நடத்துகின்றனர். இங்கு இயற்கை விவசாயத்தின் வரலாறு முதல் நவீன இயற்கை விவசாய முறைகள் வரை கற்பிக்கப்படுகிறது. சிக்கிமைப் போல கேரளாவையும் 100 சதவிகித இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு இயங்கி வருகிறது இந்த சங்கம்.