வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய போறவங்களே.. உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்பு வருது!
முகப்பு > செய்திகள் > இந்தியாவருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 1.46 கோடி தனிநபர்கள் வருமான வரி செலுத்துவதாகவும் இதன்மூலம் சுமார் 24 ஆயிரம் கோடி வருமான வரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவில் ஒரு சதவீதம் மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துவதாகக் கூறப்படுகிறது. 2022-23ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முந்தைய பட்ஜெட்டில் ஏற்பட்ட குறைகள் மற்றும் வரும் பட்ஜெட்டில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனை கேட்டு வருகிறார்.
அதன்படி வரும் நிதியாண்டில் வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை வருமான வரி தாக்கல் செய்வோரில் 8,600 பேர் தங்களது ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகம் என தெரிவிப்போர் எண்ணிக்கை 42,800 ஆக உள்ளது. 4 லட்சம் மக்கள் தங்களது வருமானம் ரூ.20 லட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
பெங்களூருவில் 3000 அடி உயரத்தில் பறந்த விமானம்! மோத போன இன்னொரு விமானம்! 426 பேரின் உயிரை காத்த ஹீரோ
இதில், 2ஆயிரத்து 200 மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சார்டர்ட் அக்கவுன்டன்ட், மற்றும் பிற தொழில் புரிவோரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி ஆகும். மிக குறைவான அளவில் 99 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இந்தியாவில் மொத்தம் 1.46 கோடி தனி நபர்கள் வருமான வரிசெலுத்துகின்றனர். இவை இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையாகும். கடந்த 2020 -21ம் நிதியாண்டில் ரூ.24,23,020 கோடி வரி வருவாய் வசூல் ஆனது.
ரூ.6,38,000 கோடி வருமான வரி மூலம் வசூலானது. இது மொத்த வரி வசூலில் 26.30 சதவீதமாகும். நிறுவனங்களின் வரி ரூ.6,81,000 கோடி (28%). ஜிஎஸ்டி வசூல் ரூ.6,90,500 கோடி (28.5%). உற்பத்தி வரி ரூ.2,67,000 கோடி (11%). சுங்க வரி ரூ.1,38,000 கோடி (ரூ.5.70%), சேவை வரி ரூ.1,020 கோடி (0.045%). இதில் பெரும்பாலானவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர். வருமான வரி சட்டம் 87ஏ பிரிவு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிகம் பேர் வெளியேறியுள்ளனர்.
எனவே வருமான வரியின் அரசுக்கு வருமானம் கிடைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய குறைந்தபட்ச கட்டணம் தனி நபர்களுக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கவும், நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்