'அந்த பழக்கத்துக்கு காரணமே கஃபேகாபிடேதான்'.. இந்திய கிரிக்கெட் வீரரின் உருக்கமான ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரான விஜி சித்தார்த்தாவின் உடல் நேற்றையதினம்  மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

'அந்த பழக்கத்துக்கு காரணமே கஃபேகாபிடேதான்'.. இந்திய கிரிக்கெட் வீரரின் உருக்கமான ட்வீட்!

முன்னதாக, கடின உழைப்பு இருந்த அளவுக்கு, லாபகரமானதொரு வணிகச் சூழலை கட்டமைக்கத் தவறியதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, தனது  டிரைவருடன் சென்ற விஜி சித்தார்த்தா, நேத்ராவதி ஆற்றங்கரையில் இறங்கிச் சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வராததாலும், அவருடைய போன் எடுக்காததாலும், டிரைவர், அவரது வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.

கிட்டத்தட்ட ஒன்றரை நாள் தேடிய போலீஸார், விஜி சித்தார்த்தாவின் பிரேதத்தை கண்டுபிடித்து தூக்கிக்கொண்டு வந்தனர். இதனையடுத்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட, இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

இந்தியாவையே உலுக்கிய கஃபே காபி டே உரிமையாளரின் இந்த மரணம் தற்கொலை என உறுதிசெய்யப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் தனது ட்விட்டரில், ‘என் நண்பர்களுடன் வெளியில் சென்று ஒரு கப் காபி சாப்பிடும் பழக்கமே கஃபே காபி டே-வினால்தான் என்பது நினைவுக்கு வருகிறது. அவரின் இறப்பு செய்தி துக்கமானது’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

CAFECOFFEEDAY, VGSIDDHARTHA, ASHWIN RAVICHANDRAN