டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பரபரப்பு!.. தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரம்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பரபரப்பு!.. தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரம்!.. என்ன நடந்தது?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும் நோய்த்தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.

குறிப்பாக எந்த அறிகுறியும் இல்லாமல் பலர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதால், அவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என 125 குடும்பங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.