"ஒரு ஆளை பிடிச்சாச்சு..." "இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க..." 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒன்று, கிராமத்துக்குள் உணவு தேடி சென்றுள்ளது. அங்கு வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அந்த யானை சாப்பிட்டது. இதனால் வெடிவெடித்து அதன் நாக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகள் சிதறின. வேதனை தாங்க முடியாமல், தண்ணீருக்குள் இறங்கி நின்று, அந்த யானை தவித்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், கும்கி யானையின் உதவியோடு, அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை பரிதாபமாக தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்