வேகமெடுக்கும் ‘ஒமைக்ரான்’ பரவல்.. இரவு நேர ஊரடங்கை அறிவித்த ‘மற்றொரு’ மாநிலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து மற்றொரு மாநிலமும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது.

வேகமெடுக்கும் ‘ஒமைக்ரான்’ பரவல்.. இரவு நேர ஊரடங்கை அறிவித்த ‘மற்றொரு’ மாநிலம்..!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Omicron: UP govt announces night curfew, Check details

அதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனிடையே ஒவ்வொரு மாநிலங்களிலும் நோய்த்தொற்றை பொறுத்து, இரவு நேர ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Omicron: UP govt announces night curfew, Check details

அதன்படி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Omicron: UP govt announces night curfew, Check details

நாளை (25.12.20221) முதல் இந்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Omicron: UP govt announces night curfew, Check details

இந்த நிலையில் அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளன. தற்போது ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாகக் கூடும் பிரச்சாரங்களை தவிர்க்க வேண்டுமென அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

OMICRON, UTTARPRADESH, NIGHTCURFEW

மற்ற செய்திகள்