'மச்சான், என்ன வந்தாலும் சரிசமமா பிரிச்சிக்கலாம்'... 'பிளான் போட்ட 7 நண்பர்கள்'... கூரையை பிய்த்துக் கொண்டு வந்த '40 கோடி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உனக்கு அதிர்ஷ்டம் அடித்தால் கூரையை பிய்த்துக் கொண்டு வரும் எனக் கூறுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் கேரள இளைஞருக்கு நடந்துள்ளது.

'மச்சான், என்ன வந்தாலும் சரிசமமா பிரிச்சிக்கலாம்'... 'பிளான் போட்ட 7 நண்பர்கள்'... கூரையை பிய்த்துக் கொண்டு வந்த '40 கோடி'!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அப்துசலாம். இவர் ஓமனில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், அவரை பிறவச்சத்திற்காகத் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு அனுப்பியுள்ளார். ஓமனில் சில தொழில்களைச் செய்து வரும்  அப்துசலாம், கொரோனா காரணமாகத் தொழிலில் சரிவைச் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்தார்கள்.

அதன்படி 7 நண்பர்களும் 7 லாட்டரி சீட்டு வாங்க வேண்டும். அதில் யாருக்குப் பரிசு விழுந்தாலும் அதை 7 பேரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி 7 பேரும் 7 அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கியுள்ளார்கள். அதில் முதல் பரிசான 20 மில்லியன் திராம் அப்துசலாமுக்கு அடித்துள்ளது. அது இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் ஆகும். 

Oman-based Indian who won Rs 40 cr in Big Ticket draw

இந்நிலையில் அப்துசலாமுக்கு பரிசு விழுந்ததை அவரது சகோதரர் அவருக்குத் தெரிவித்துள்ளார்.  ஆனால் அப்துசலாம் அதை நம்ப மறுத்துள்ளார். சகோதரர் எவ்வளவோ சொல்லியும் அப்துசலாம் அதை நம்பவில்லை. இதையடுத்து லாட்டரி நிறுவனத்தினர் அப்துசலாமை தொடர்பு கொண்டு சொன்ன பிறகு தான் தனக்குப் பரிசு விழுந்ததை அப்துசலாம் நம்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ''எங்களுக்குப் பரிசு விழுந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த பரிசுத் தொகையினை நண்பர்கள் முடிவு செய்தது போலச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள இருக்கிறோம். அதில் குறிப்பிட்ட பணத்தை நல்ல விஷயங்களுக்குச் செலவிட இருக்கிறோம். குறிப்பாகக் கேரள வெள்ளம் மற்றும் கொரோனா காரணமாகப் பல வேலையிழந்து நிற்கிறார்கள்.

Oman-based Indian who won Rs 40 cr in Big Ticket draw

அவர்களுக்கு இந்த பணத்தில் உதவி செய்ய இருக்கிறோம். மேலும் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினருக்குத் திருமணம் செய்ய உதவி செய்ய இருக்கிறோம்'' என அப்துசலாம் கூறியுள்ளார். சும்மா வாங்கி பார்க்கலாம் என வாங்கிய லாட்டரிக்கு 40 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள சம்பவம், அப்துசலாம் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்