கொரோனாவிற்காக சிகிச்சை ... மாடியில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த முதியவர் ... இறுதியில் நேர்ந்த பரிதாபம்
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் வரை கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
ஹரியானாவை சேர்ந்த 58 வயது நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கல்பனா சாவ்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் வீட்டில் செல்ல வேண்டும் எனக் கூறி வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த தப்பிக்க முயன்ற அந்த முதியவர், தான் சிகிச்சை பெற்று வந்த ஆறாவது மாடியில் இருந்து போர்வைகள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை இணைத்து அங்கிருந்த ஜன்னல் கம்பியில் கட்டி, குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் போர்வைகள் கிழிந்ததால் மாடியில் இருந்து தவறி விழுந்து அந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், முதியவர் தப்பிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்பனா சாவ்லா மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.