"அவங்க கண்ணுல பயமில்ல".. 67 வயதிலும் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி.. துணிச்சலா Vibe செய்த மூதாட்டி..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஏராளமான விஷயங்கள் செய்வதற்காக வயது என்ற விஷயத்தை ஒரு வரைமுறையாக பல விஷயங்களில் ஏராளமானோர் பின்பற்றுவதை நாம் காணலாம்.

"அவங்க கண்ணுல பயமில்ல".. 67 வயதிலும் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி.. துணிச்சலா Vibe செய்த மூதாட்டி..

                                     Image Credit : yathrikan_200 Instagram

Also Read | "என் மகனா நீ கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ?".. 100 வயது தந்தையை நெகிழ வெச்ச 70 வயசு மகன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!!

ஆனால் அதே வேளையில் இன்னொரு பக்கம் வயது என்பது எந்த ஒரு சாதனையும் செய்வதற்கோ, எந்த ஒரு செயலை செய்வதற்கோ நிச்சயம் தடையாக இருப்பதில்லை என்பதை ஏராளமான முதியவர்கள் தொடர்ந்து நிரூபித்து வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், முதியவர்கள் பலரும் வியக்க வைக்க வகையில் செய்யும் விஷயங்கள் குறித்து நிறைய வீடியோக்களை நாம் இணையத்தில் அதிகம் கடந்து வந்திருப்போம்.

இந்த நிலையில், அதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் 67 வயதான மூதாட்டி ஒருவர் தற்போது செய்துள்ள விஷயம் ஒன்று, பெரிய அளவில் இணையவாசிகள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.

Old woman rope cycling stunt in brave video viral

Image Credit : yathrikan_200 Instagram

67 வயதாகும் பெண்மணி ஒருவர் மஞ்சள் நிற புடவை அணிந்தபடி துணிச்சலுடன் சைக்கிள் ஒன்றை ஓட்டியுள்ளார். அதுவும் வெறும் சாலையில் ஓட்டாமல் சற்று உயரத்தில் தலையில் முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு கியர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு மெல்லிய கம்பி ஒன்றின் மீது அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார்.

இளம் வயதில் இருப்பவருக்கே பாதுகாப்பு பல இருந்தாலும் இந்த சாகசத்தை மேற்கொள்ளும் போது ஒரு சிறிய பயம் இருக்கும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் மிகவும் துணிச்சலாக அந்த மூதாட்டி சைக்கிளை அந்தரத்தில் ஓட்டி சென்ற காட்சிகள் பெரிய அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Old woman rope cycling stunt in brave video viral

Image Credit : yathrikan_200 Instagram

அதே போல, இந்த சாகசத்திற்கு முன்பாக தனக்கு பயம் இல்லை என்றும் நான் சைக்கிள் ஓட்டுவேன் என்றும் தன்னுடைய இந்த ஆசையை நிறைவேற்றும் படியும் அங்கு இருந்தவரிடம் அந்த பெண்மணி கூறி உள்ளதாகவும் இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பாட்டி கொஞ்சம் கூட பயப்படவே இல்லை என்றும் சவால் முடியும் வரை மிக உறுதியாக இருந்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள சூழலில் வயது நிச்சயம் எந்த ஒரு விஷயத்திற்கும் தடை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது இந்த வீடியோ.

To Readers : This woman are trained professionals, don't try this at home.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shy Nu (@yathrikan_200)

Also Read | தளபதி விஜய் பாணியில் சூப்பரா சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்..! தீயாய் பரவும் ட்வீட்...

OLD WOMAN, CYCLING, OLD WOMAN ROPE CYCLING

மற்ற செய்திகள்