'இதெல்லாம் அசால்ட்பா எனக்கு.. வேற எதனாவது இருக்கா?'.. 'தசராவில் தெறிக்கவிட்ட' பாட்டிமாவின் ரெக்கார்டு!
முகப்பு > செய்திகள் > இந்தியாவருடாவருடம் மைசூருவில் தசாரா நிகழ்வு கோலாகலமாகப் பார்க்கப்படுவதற்கு முக்கியக் காரணமே, அதனை மக்கள் கொண்டாடும் விதம்தான்.
பந்தல் போட்டு, அன்னதானமிட்டு வருடாவருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் 10 நாட்களில் அவர்கள் தசராவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுவது ஒரு திருவிழா போல் மைசூருவில் களைகட்டும் என்பதனாலேயே அந்த பண்டிகைக்கு அங்கு சிறப்பு உண்டு.
இம்முறை கர்நாடாகாவின் மைசூருக்கு உட்பட்ட கிராமப்புறம் ஒன்றில், பெண்களுக்கு இட்லி பரிமாறப்பட்டதோடு, அவர்களில் யார் சீக்கிரம் இட்லி சாப்பிட்டு ஒரு ரெக்கார்டினை படைக்கிறார்கள் என்பது குறித்த போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அதில் வயதான பெண்மணி ஒருவர் 1 நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டதை அடுத்து வைரலாகி வருகிறார்.
எவ்வளவுதான் மல்லிப்பூ மாதிரி இட்லி இருந்தாலும், அத்தனை சூடான 6 இட்லிகளை 1 நிமிடத்தில் சாப்பிடுவது என்பதெல்லாம், நாடி, நரம்பு எல்லாவற்றிலும் இட்லி சாப்பிடும் ஆர்வம் ஊறிப்போன ஒருவரால்தான் முடியும் என்பதுபோல, சரோஜாம்மா என்கிற இந்த வயதில் மூத்த பெண்மணி, விழாவை நடத்துபவர்கள் தங்கள் கையில் ஸ்டாப் வாட்ச் வைத்துக்கொண்டு ஸ்டார்ட் என்று சொன்னதும், இவ்வளவு வேகமாக 1 நிமிடத்தில் 6 இட்லி சாப்பிட்ட சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
இந்த வருடம் செப்டம்பர் 28-ல் தொடங்கி அக்டோபர் 8-ஆம் தேதி வரை தசரா கொண்டாட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.