"கிராமத்த விட்டுட்டு எல்லாரும் நகரத்துக்கு போனாங்க!".. 30 வருட உழைப்பை சாதனையாக்கிய முதியவருக்கு.. 'ஆனந்த மகிந்திரா' கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலம் கயா மாவட்டம், கொத்திலாவா கிராமத்தைச் சேர்ந்த லாங்கி புய்யான்  (Laungi Bhuiyan) என்கிற முதியவர்   தனி ஆளாக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தனது கிராமத்தின் விவசாய தேவைக்காக கால்வாய் வெட்டியதால் பாராட்டுகளை குவித்து வருகிறார்.

"கிராமத்த விட்டுட்டு எல்லாரும் நகரத்துக்கு போனாங்க!".. 30 வருட உழைப்பை சாதனையாக்கிய முதியவருக்கு.. 'ஆனந்த மகிந்திரா' கொடுத்த சர்ப்ரைஸ்!

தனது கிராமத்திற்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து மழைநீர் தனது கிராமத்தில் இருக்கும் வயல் வெளிக்கு நேரடியாக வரவேண்டும் என்றும், குளத்தில் தேங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் இந்த பணியை அவர் செய்து முடித்துள்ளார்.  "கிராமத்துக்காரர்கள் எல்லாம் நகரத்துக்கு செல்கிறார்கள், ஆனால் நான் கிராமத்திலேயே இருந்தேன்" என்று இதுகுறித்து லாங்கி புய்யான் தெரிவித்துள்ளார்.

லாங்கி புய்யான் வெட்டிய கால்வாய் மூலம் தற்போது அந்த ஊருக்கு தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது என்றாலும் இதற்கென அவர் 30 ஆண்டுகள் அவர் உழைத்துள்ளார். இதுபற்றிய செய்திகள் பரவியதை அடுத்து, அவரை  கவுரவிக்கும் வகையில் மகிந்திரா நிறுவனம் தற்போது ஒரு டிராக்டரை பரிசாக வழங்கி உள்ளது.

இதுபற்றி பேசிய மகேந்திரா டீலர் சித்திநாத் விஸ்வகர்மா, ‘லாங்கி புய்யான் குறித்த தகவலை ட்விட்டரில் பார்த்த ஆனந்த் மகிந்திரா, அவருக்கு ஒரு டிராக்டர் வழங்கப் போவதாக கூறினார். அதன்படி, ஏரியா அலுவலகத்திற்கு தகவல் வந்தது.  டிராக்டரும் வழங்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்