பாட்டி போடுற ஸ்டெப்ஸ் ஒண்ணும் ஒவ்வொரு ரகம்.. வேற மாதிரி மாஸ் காட்டிய மூதாட்டி.. குழந்தைங்களயே மிஞ்சிட்டாங்க..
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில ஆண்டுகளாகவே, பல நிறுவனத்தின் ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதால், ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்த படி வேலை பார்க்கும் நிலை உள்ளது.
அப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து விட்டு, எழுந்து கொள்ளும் சமயத்தில், கை, கால் என உடம்பில் பல பாகங்கள் வலி எடுக்கத் தொடங்கும்.
இப்படி இளம் வயதிலேயே உடல் வலி இருப்பதாக பலரும் கூறும் இதே காலகட்டத்தில், வயதான மூதாட்டி ஒருவர், குழந்தைகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, வயதான பெண் ஒருவர், புஷ்பா படத்தில் வரும் 'சாமி சாமி' பாடலுக்கு அப்படியே நடிகை ராஷ்மிகா போலவே நடனமாடி இருந்த வீடியோக்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், தற்போது பாட்டி ஆடும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
போடுறா பாட்ட..
ஏதோ ஒரு பள்ளிகூடத்தின் பங்க்ஷன் வீடியோ போல இது தெரியும் நிலையில், சிறு குழந்தைகள் அதிகம் பேர் மேடையில் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பின்னால், சில ஆசிரியைகளும் மெதுவாக நடனமாடிய படி நிற்கின்றனர். ஆனால், இவை அனைத்தையும் விட, குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி துள்ளிக் குத்தித்து கொண்டு நிற்கிறார் ஒரு மூதாட்டி.
Vibing மோடில் பாட்டி..
பலரது கண்ணும் குழந்தைகள் கூட்டத்தை விட பாட்டியின் நடனத்தை ரசித்தபடி நிற்க, ஃபுல் எனர்ஜியுடன் இளமை ததும்பும் வகையில், உற்சாகத்தில் ஆடிக் கொண்டே இருக்கிறார் அவர். இந்த வயதிலும் இளைஞர்களை போல ஆட்டம் போடும் பாட்டியின் வீடியோ, தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்