அப்பா...! உங்க 'ஆசைய' எப்போவுமே தடுக்க மாட்டோம்...! 'கொரோனா டெஸ்டிங் சென்டர்ல மலர்ந்த காதல்...' - காதலிக்குறதுக்கு எதுக்குங்க வயசெல்லாம்...?!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் கொரோனா பரிசோதனை மையத்தில் உருவான காதலால் 73 வயது முதியவர் 68 வயது மூதாட்டியை திருமணம் செய்துக் கொண்டார்.

அப்பா...! உங்க 'ஆசைய' எப்போவுமே தடுக்க மாட்டோம்...! 'கொரோனா டெஸ்டிங் சென்டர்ல மலர்ந்த காதல்...' - காதலிக்குறதுக்கு எதுக்குங்க வயசெல்லாம்...?!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (73). இவர் கேட்டரிங் உரிமையாளராக தொழில் செய்து வருகிறார். வர்கீசுக்கு திருமணம் முடிந்து மூன்று மகன்கள் உள்ளனர். இவருடைய அன்பு மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.

மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளி இடங்களில் வசித்து வருகின்றனர். எனவே வர்கீஸ் மட்டும் வீட்டில் தனிமையோடு வாழ்ந்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. ஆகவே, இவர் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்தா நிலையில் முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடும் முகாம்கள் கொச்சியில் மாநகரத்தில் நடைபெற்றது.

இதனால் கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்கீஸ் சென்றபோது, அங்கு அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி (68) என்பவரை சந்தித்துள்ளார். அஸ்வதிக்கும் திருமணமாகி மகள் உள்ளார். இவரது கணவர் லண்டனில் டாக்டராக இருந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து போனார். இதன் காரணமாக அஸ்வதி கொச்சியில் தனியாக வசித்து வந்தார். அங்கு ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார்.வர்கீஸ் சென்ற கொரோனா பரிசோதனை மையத்திற்கு அஸ்வதியும் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சந்தித்தபோது இருவரும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுக துக்கங்களை மனம் திறந்து பேசியுள்ளனர். முதிய வயதில் ஏற்படும் தனிமை உணர்வின் நரக வேதனை குறித்து பேசியுள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்ட நிலையில் அடுத்தகட்டமாக இவ்வளவு அன்பை பரஸ்பரம் கொண்டிருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா என யோசித்தனர்.

இதை தங்களின் மகன், மகள்களிடம் இருவரும் கூறினர். வெளியூர்களில் வசிக்கும் மகன்கள் தந்தையின் ஆசையை தடுக்க விரும்பவில்லை. வர்கீஸ், அஸ்வதியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுபோல அஸ்வதியின் மகளும், தாயார் அவரது காதலன் வர்கீசை மணம் முடிக்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வர்கீஸ், அஸ்வதி திருமணம் நேற்று முன்தினம் (06-07-2021) கொச்சியில் எளிமையாக நடைபெற்றது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் உட்பட மொத்தம் இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

old couple love affair at the Corona Test Center in Kerala.

காதல் எந்த வயதிலும் உருவாகலாம். அதற்கு வயது ஒரு தடை இல்லை என்பது இவர்களின் திருமணம் உணர்த்தியுள்ளது. மேலும் எந்த கலாச்சார சிந்தனைகளுக்கும் இடம் தராமல் தங்கள் குழந்தைகளே முன் நின்று பெற்றோரின் திருமணத்தை நடத்தியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

மற்ற செய்திகள்