'புதிய சேவை!'... 'புதிய உற்பத்தி!'.. 'அடுத்த' களத்தில் இறங்க 'அதிரடியாக' திட்டமிட்டுள்ள OLA வாடகை கார் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது உலகம் எங்கும் மின்சார வாகன உற்பத்திமுறை கொண்டுவரப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இ-ஸ்கூட்டர்களின் வரத்து மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தால் இயக்கப்படும் இதுபோன்ற இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்குவது குறித்து OLA நிறுவன அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
வாடகை கார் நிறுவனமான OLA முதன்முறையாக வாகன உற்பத்தியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதற்கு மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென 100 ஏக்கர் நிலம் வேண்டியுள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளுடன், OLA நிறுவனம் விண்ணப்பித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
மற்ற செய்திகள்