'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரியை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!

மக்களவை தேர்தலுக்காக மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்தவகையில் நேற்று முன்தினம்  பரப்புரைக்காக ஒடிசா மாநிலத்தின் சாம்பல்பூர் சென்றிருந்தார். அப்போது மோடி ஹெலிகாப்டரை விட்டு இறங்கியதும், அவர் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.ஆனாலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.

இதனிடையே இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது.விசாரணையின் முடிவில் பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,தேர்தல் ஆணையத்தின் சோதனை சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அந்த வீதியை  மொஹ்சின் மீறியுள்ளார் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக சாம்பல்பூரில் அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.