“கனவுல வந்த அம்மன்!... கொரோனாவ முடிவுக்குக் கொண்டுவர நரபலி கேட்டாள்!”..'கோவிலுக்கு' வந்தவரின் 'தலையை' துண்டாக வெட்டிய 'பூசாரி!'
முகப்பு > செய்திகள் > இந்தியாகடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் நரபலி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறி கோவில் சன்னதியில் வைத்து நபர் ஒருவரின் தலையை வெட்டியுள்ள பூசாரியின் செயல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கின் அமைந்துள்ளது பிராமணி தேவி கோவில். இக்கோவிலில் பூசாரியாக இருப்பவர் சன்சாரி ஓஜா. 72 வயதான இவர் இரண்டு நாட்களுக்கு முன் 52 வயது நபர் ஒருவரை கோவில் சன்னதிக்குள் அழைத்து வந்ததோடு, கடவுள் முன்னிலையில் வைத்து அந்த நபரின் தலையை துண்டாக வெட்டி நரபலி கொடுத்துள்ளார். அதன் பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்று தானாகவே சரணடைந்துள்ளார்.
இதுபற்றி போலீஸாரிடம் கூறிய சன்சாரி, “என் கனவில் பிராமணி தேவி அம்மனே வந்து கொரோனா வைரஸ் பாதிப்பு முழுசா முடிவுக்கு வரணும்னா நரபலி கொடுக்க வேண்டும் என கேட்டார். சாமியே சொன்னதால்தான் நான் இப்படி செய்துவிட்டேன்” என கூறி அதிரவைத்துள்ளார். இதனையடுத்து சன்சாரியைக் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே அந்த கிராமத்தின் சுற்றளவில் ஒரு மா பழத்தோட்டம் தொடர்பாக இறந்தவருடன் சன்சாரி நீண்டகாலமாக தகராறு செய்ததாகவும், கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி மத்திய ரேஞ்ச் ஆஷிஷ்குமார் சிங் கூறியபோது, “சம்பவத்தின்போது சன்சாரி குடிபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறுநாள் காலையில் அவருக்கு மீண்டும் சுயநினைவு வந்தபோது அவர் சரணடைந்து, தான் செய்த கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என கூறினார்.
மற்ற செய்திகள்