என்ன பண்ணியும் நிக்க மாட்டுதே... 'இரட்டை' பிரசவத்துக்கு பின் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்... 'துரித' யோசனையால் தாயைக் காப்பாற்றிய நர்ஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரட்டை குழந்தைகளை ஈன்ற இளம்தாய்க்கு நில்லாமல் ரத்தப்போக்கு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அரசு மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதி இளம்தாய் ஒருவர் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து ரத்தப்போக்கை நிறுத்திட மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
இதைப்பார்த்த நர்ஸ் தினேஷ்வரி என்பவர் தாய்ப்பால் கொடுத்தால் ஆக்சிடோஸின் சுரந்து ரத்தப்போக்கு நிற்கும் என தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள் நர்ஸின் யோசனையை செயல்படுத்த தாய்ப்பால் கொடுத்த 1 மணி நேரத்தில் அவருக்கு ரத்தப்போக்கு நின்றது. தக்க சமயத்தில் இந்த யோசனையை சொன்னதற்காக நர்ஸ் தினேஷ்வரியை மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
மற்ற செய்திகள்