திடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுழு கவச உடையுடன் நர்ஸ் ஒருவர் லிஃப்டுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கலசமேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவர் லிப்ஃடில் ஒரு தளத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென கரண்ட் கட்டானதால் அவர் லிஃப்டின் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.
உதவிக்காக அவர் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ந்து காற்று,வெளிச்சம் இல்லாததால் அவர் உள்ளேயே மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின் அவர் லிஃப்டுக்குள் கிடந்ததை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நர்ஸ் கூறுகையில், '' நான் லிஃப்ட் உள்ளே செல்லும்போது மின்சாரம் தடைபட்டது. அவசர உதவி வேண்டி அங்கிருந்த அலாரத்தை அரைமணி நேரத்துக்கு மேல் அடித்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. காற்று இல்லாததால் வியர்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை,'' என்று தெரிவித்து இருக்கிறார்.
மதியம் 3.05 மணிக்கு லிஃப்டுக்குள் மயங்கி விழுந்தவர், மாலை 4.20 மணிக்கே மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் முழுவதும் வலி இருப்பதாக அவர் தெரிவித்ததால் அவருக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கு தற்போது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்