'கூகுள் பே, போன் பே, PAYTM-ல...' சில நாட்களுக்கு 'இந்த பிரச்சனைகள்'லாம் இருக்கும்...! - தேசிய கட்டண கழகம் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில நாட்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளும், அதற்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களும் சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள் வங்கி செல்வதை தவிர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும், கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே போன்ற ஆப்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), அதன் டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மேம்படுத்துதலில் முக்கியமாக UPI கேட்வே வழியாக BHIM அல்லது மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களான கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே வழியாக குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு இடையில் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு மட்டும் IST நேரப்படி காலை 1 மணி முதல் வரை 3 மணி வரை பரிவர்த்தனைகள் இயங்காது எனவும், அது எத்தனை நாட்கள் நடைபெறும் என சரியான நாட்களை NPCI குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு குறித்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் ட்விட் செய்துள்ளது NPCI அமைப்பு.
மற்ற செய்திகள்