'அஞ்சு நாள் வேலை பார்த்தா போதும்'... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாரத்தில் 6 நாட்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை, 5 நாட்களாக  குறைத்து சிக்கிம் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

'அஞ்சு நாள் வேலை பார்த்தா போதும்'... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?

சிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக திங்கள்கிழமை அன்று பி.எஸ். கோலே, பதவியேற்றார். அதன்பின்னர், அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தப் பிறகு செய்தியாளர்களிடம் கோலே பேசினார். அப்போது, சிக்கிம் மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்று கோலே அறிவி்த்துள்ளார்.

வாரத்தில் 6 நாட்களாக இருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நாட்கள், 5 நாட்களாக குறைக்கப்படும் என்ற எங்களது தேர்தல் வாக்குறுதியை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி இருக்கிறோம் என்று முதல்வர் கோலே குறிப்பிட்டார். இதன் முலம் அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 

இதை அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கோலே தெரிவித்தார். தனக்கு முன் இருந்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றும் கோலே கூறினார். மேலும், தானும் மற்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இனி பார்ச்சுனர் எஸ்.யு.வி. சொகுசு கார்களுக்குப் பதிலாக, ஸ்கார்ப்பியோ கார்களையே பயன்படுத்துவோம் என்றும் அறிவி்த்தார்.

SIKKIM, GOVERNMENT, EMPLOYEES