என்னது தங்க மூக்குத்தி இலவசமா...! 'ஆமாங்க அது பெண்களுக்கு...' 'ஆண்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' - என்ன மேட்டர் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் இலவசங்களை கொடுத்து கொரோனா தடுப்பூசி போட ஊக்கப்படுத்தி வருகிறது அம்மாநில அரசு.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் கொரானா பரவ தொடங்கிய நாள் முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகியுள்ளது. தற்போது இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கழைகழகத்தின் கோவிட்ஷேல்ட் என்னும் கொரோனா தடுப்பு மருந்தும் மக்களிடையே செலுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில மக்கள் தங்களாகவே வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், 96 சதவீதம் பேர் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கி வருகின்றனர். இதற்காக இந்திய அரசாங்கம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் மாநிலம் அரசாங்கமும் பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதில் குஜராத் மாநிலத்தில், ஒரு படி மேலே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் அதிகம் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளாத ராஜ்கோட் பகுதியில் உள்ள தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்த மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு கேக் மற்றும் முட்டையை அடிக்க உதவும் ப்ளெண்டர் (Blender) இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கான தடுப்பூசி முகாமையும் இந்த அமைப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், இதுவரை 7,59,79,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்