Naane Varuven M Logo Top

கணவரை பிரிந்து வாழ்க்கை.. மனசு முழுக்க வேதனை.. மடியில் குழந்தையை கட்டிக் கொண்டு ரிக்ஷா ஓட்டும் இளம்பெண்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கை எப்போதும் நினைத்தது போல இருந்து விடாது. நாம் ஒன்று நினைக்க, மறுபக்கம் வேறு ஏதாவது விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

கணவரை பிரிந்து வாழ்க்கை.. மனசு முழுக்க வேதனை.. மடியில் குழந்தையை கட்டிக் கொண்டு ரிக்ஷா ஓட்டும் இளம்பெண்!!

அதிலும் குறிப்பாக, வாழ்க்கையில் அடிக்கடி ஏராளமான துயரங்கள் கூட வந்து கொண்டே தான் இருக்கும்.

அப்படி ஒரு வாழ்க்கை தான் நொய்டாவின் சன்ச்சல் சர்மா என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் சன்ச்சல் சர்மா. இவருக்கு தற்போது 27 வயதாகிறது.

இதற்கு மத்தியில், மிகவும் சவாலான ஒரு வாழ்க்கையை சன்ச்சல் வாழ்ந்து வருகிறார். நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்டர் 59 வரை இ ரிக்ஷா ஓட்டி வருகிறார் சன்ச்சல். அதுவும் தனியாளாக இல்லாமல், தோளுடன் கூடிய தூளியில் தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் இ ரிக்ஷா ஓட்டி வருவது தான் பலரையும் சன்ச்சல் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

noida woman drives rickshaw with her one year child

கடந்த 2019 ஆம் ஆண்டும் சன்ச்சல் சர்மாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நாள் முதலே அவரது கணவர் கடுமையாக துன்புறுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அவருடன் வாழ வேண்டாம் என முடிவு செய்த சன்ச்சல், குழந்தையுடன் தாய் வீட்டிற்கே வந்து விட்டார். கணவரை பிரிந்து வாழும் சன்ச்சலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று தவணை முறையில் ஆட்டோ கொடுத்துள்ளது.

இதில், பிழைப்பு நடத்தி வரும் சன்ச்சல், ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் வரை சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குழந்தையை தோளில் சுமந்த படி சன்ச்சல் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், தாய்க்கு தொந்தரவு எதுவும் கொடுக்காமல், சிரித்த முகத்தில் குழந்தை இருப்பது வாடிக்கையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

noida woman drives rickshaw with her one year child

சன்ச்சலின் தாய், தள்ளு வண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். சன்ச்சலுக்கு மூன்று சகோதரிகள் உள்ள நிலையில், அனைவரும் திருமணமாகி கணவர்களுடன் சுற்றுப்புற இடங்களில் வசித்து வருகின்றனர். தனது குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை என்பதால், கூடவே எடுத்துக் கொண்டு வேலை பார்த்து வருகிறார் சன்ச்சல்.

noida woman drives rickshaw with her one year child

காலையில் இ ரிக்ஷாவுடன் புறப்படும் சன்ச்சல், பின் மதியம் வீடு திரும்புகிறார். குழந்தையை குளிப்பாட்டி உணவளித்த பின், மீண்டும் இ ரிக்ஷா ஓட்ட சென்று மாலையில் மீண்டும் வீடு திரும்புகிறார். கணவரை பிரிந்து வாழும் பெண், கையில் குழந்தையுடன் மனம் தளராது அதன் எதிர்காலத்திற்காக உழைத்து வரும் விஷயம், பலரையும் மனம் உருக வைத்துள்ளது. பெண்ணின் மன தைரியத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

WOMAN, RICKSHAW

மற்ற செய்திகள்