9 செகண்டு தான்.. தரை மட்டமான நொய்டா 'கட்டிடம்'.. அடுத்தடுத்து நடந்தது என்ன??.. பரபரப்பை கிளப்பும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவின் முக்கிய பகுதியான 93ஏ செக்டாரில் இருக்கும் சூப்பர் டெக் இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என இந்த கட்டிட உரிமையாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சூப்பர் டெக் இரட்டை கட்டிடத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி வெளிவந்த தீர்ப்பில், '3 மாதங்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி இந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இங்குள்ள உயரமான கட்டிடத்தில் 32 தளங்களும், அடுத்த கட்டிடத்தில் 29 தளங்களும் அமைந்திருக்கின்றன. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி.
இன்று (ஆகஸ்ட் 28) மதியம் 2.30 மணியளவில், இந்த கட்டிடம் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சரியாக 9 நொடியில், இந்த கட்டிடம் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்படுவதற்கு முன்பாக, நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த இரட்டை கோபுரம் அருகே உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அதனைச் சுற்றி இருந்த சுமார் 1,500 வாகனங்கள் வரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இன்று இரட்டை கோபுர தகர்ப்பின் காரணமாக, நொய்டாவின் குறிப்பிட்ட பகுதியில், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தகர்ப்பு நடந்த போது, 1 நாட்டிகல் மைல் தூரத்திற்கு வான்வெளியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த கட்டிடத்தை இடிக்க சுமார் 3,700 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்