'புருஷன்', 'பொண்டாட்டி'க்குள்ள சண்ட நடந்துருக்கு... கோவத்துல 14 மாச 'பிஞ்சு' கொழந்தைய தூக்கி பொண்டாட்டி மேலயே... மனதை உறைய செய்யும் கொடூரம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநொய்டாவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் தனது குழந்தையை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜம்ஷீத் என்பவர், தனது மனைவியுடன் நொய்டாவிலுள்ள காலனி ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 14 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கூலி தொழிலாளியாக ஜம்ஷீத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஜம்ஷீத் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு நாள் இருவருக்கும் இடையில், வாக்குவாதம் முற்றவே அதிகம் கோபமடைந்த ஜம்ஷீத், தனது பிஞ்சுக் குழந்தையான 14 மாத பெண் குழந்தையை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் குழந்தை தரையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்து போய் விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் பெயரில், ஜம்ஷீத் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS